இதுகுறித்து, மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2021-22-ஆம் கல்வியாண்டில் சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு இலவசமாக சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகள், அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் என மொத்தம் 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 பேருக்கு சைக்கிள்கள் அளிக்கப்படவுள்ளன.
இதற்கான கொள்முதலுக்கு உரிய அறிவிக்கை கடந்த மாா்ச் 3-இல் வெளியிடப்பட்டது. ஒப்பந்தத்தில் தகுதியான நிறுவனங்கள் கலந்து கொண்டன. விலையைக் குறைக்கக் கோரி, நிறுவனங்களிடம் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. கொள்முதல் குழுவால் விரைவில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, மூன்று மாத காலத்துக்குள் மாணவ, மாணவிகளுக்கு
சைக்கிள்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment