அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து, அதற்கு ஈடாக ஊதியம் பெறும் முறை, 2020ம் ஆண்டில் திடீரென நிறுத்தப்பட்டது. இந்த நடைமுறை, 2022 ஏப்ரலுடன் முடிவதாக இருந்தது. ஆனால், மறு உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்புக்கு பணம் வழங்கும் முறை நிறுத்தப்படுவதாக சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது.
இதை பின்பற்றி, தமிழக பள்ளிக் கல்வியில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஈட்டிய விடுப்புக்கு பணம் வழங்கும் முறை நிறுத்தப்படுவதாக, பள்ளிக்கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குனர் நரேஷ் சுற்றறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment