வாட்ஸ்அப் மூலம் டிஜிலாக்கர் சேவையை பெறுவது எப்படி - ஆசிரியர் மலர்

Latest

 




29/05/2022

வாட்ஸ்அப் மூலம் டிஜிலாக்கர் சேவையை பெறுவது எப்படி

கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைப்பதற்கான வசதிகளை டிஜிலாக்கர் என்ற செயலி வழங்கி வருகிறது. இந்நிலையில், டிஜிலாக்கர் சேவைகள் இப்போது வாட்ஸ்அப் மூலம் MyGov ஹெல்ப் டெஸ்கில் கிடைக்கும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிஜிலாக்கர் சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே மக்கள் பெற முடியும் என்று அறிவித்துள்ளது. இது தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், சீரான நிா்வாகத்தை உறுதிசெய்து, மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கில் அரசின் சேவைகள் இணைய வழியில் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் கீழ் பான் கார்டு, ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ், காப்பீட்டுச் சான்றிதழ், சிபிஎஸ்இ பொதுத்தோ்வு மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் வடிவில் செயலியில் சேகரித்து வைத்துக்கொள்ள முடியும்.

 டிஜிலாக்கர் சேவைகளை வாட்ஸ்ஆப் வாயிலாகப் பெற 9013151515 என்ற எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். இதன் மூலமாக அரசின் சேவைகளை மக்கள் எளிதில் பெற முடியும் MyGov ஹெல்ப் டெஸ்க், சேவைகளை எளிதில் அணுகக்கூடியதாகவும், வெளிப்படையானதாகவும், எளிதாகவும் செய்யும் வகையில் டிஜிலாக்கர் சேவைகளுக்கான அணுகலை வாட்ஸ் மூலம் வழங்கும். வாட்ஸ்அப்பில், பயனர்கள் தங்கள் டிஜிலாக்கர் கணக்குகளை உருவாக்கி சரிபார்த்துக்கொள்ளலாம்,

அத்துடன் அவர்களின் பான் கார்டு, மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் போன்ற ஆவணங்களைப் பதிவிறக்கலாம். MyGov ஹெல்ப் டெஸ்க் மூலம் பயனர்கள் பின்வரும் ஆவணங்களை இப்போது அணுகலாம்: பான் கார்டு ஓட்டுனர் உரிமம் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) வாகன காப்பீடு – இரு சக்கர வாகனம் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் காப்பீடு ஆவணம் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், வாட்ஸ்அப்பில் MyGov ஹெல்ப் டெஸ்க் உருவாக்கப்பட்டது. முன்னதாக, இது MyGov ஹெல்ப் டெஸ்க் என இருந்தது. 

இது தடுப்பூசி முன்பதிவுகள் மற்றும் நோய்த்தடுப்புச் சான்றிதழ் பதிவிறக்கங்கள் போன்ற தொடர்புடைய தகவல்களை வழங்கியது. இதன் மூலம் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஹெல்ப்லைனைத் தொடர்பு கொண்டுள்ளனர்.மேலும் 33 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459