செயல் அலுவலர் வேலை - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




24/05/2022

செயல் அலுவலர் வேலை - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் நிலை-III பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் மற்றும் இந்து சமயத்தை பின்பற்றும் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து மட்டுமே ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


விளம்பர எண்.616 அறிக்கை எண்.122022 தேதி: 19.05.2022

பணி: செயல் அலுவலர் நிலை-III

காலியிடங்கள்: 42

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 75,900

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி 25 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

கட்டணம்: நிரந்திரப் பதிவுக் கட்டணம் ரூ.150. தேர்வுக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். கட்டண சலுகை விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.06.2022

 எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 10.09.2022

மேலும் விவரங்கள் அறிய  https://www.tnpsc.gov.in/Document என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459