பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் எப்போது ? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி - ஆசிரியர் மலர்

Latest

 




25/05/2022

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் எப்போது ? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

நிதிநிலை சீராகும் போது பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்

- அமைச்சர் அன்பில் மகேஸ் 
1.அரசுப்பள்ளி மாணவர்களுக்கு Break Fast எப்போது?

ஜூன் 13-ல் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமலுக்கு வராது

பள்ளிகளில் 8.30 மணிக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும்

எப்போது திட்டத்தை தொடங்கலாம் என்று முதலமைச்சரிடம் பேசி முடிவு

2.நிதிநிலை சீராகும் போது பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்

3.கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்புகிறது கல்வியாண்டு

வரும் கல்வியாண்டில் ( 2022-23 ) 210 வேலைநாட்களுடன் பள்ளிகள் செயல்பட உள்ளது

காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் கட்டாயம்

4.நீட் தேர்வுக்கு தனியே பயிற்சி வழங்கப்படாது

பள்ளிகளிலேயே மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த நடவடிக்கை. 

5.10,11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருப்பின், Grace Marks வழங்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவு. 


அடுத்த கல்வி ஆண்டு பொதுத் தேர்வு அறிவிப்புகள்*


🎯 ஏப்ரல் 3ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்


🎯 மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவக்கம் 


🎯மார்ச் 14-ஆம் தேதி 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவக்கம்


 - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459