என்னமோ தப்பா நடக்குது!\" அதிபயங்கர வேகத்தில் விரிவடையும் பிரபஞ்சம்.. குழம்பி நிற்கும் ஆய்வாளர்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




21/05/2022

என்னமோ தப்பா நடக்குது!\" அதிபயங்கர வேகத்தில் விரிவடையும் பிரபஞ்சம்.. குழம்பி நிற்கும் ஆய்வாளர்கள்


நமது அண்டம் விரிவடையும் வேகம் குறித்து நாசா ஆய்வாளர்கள் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.கேலக்ஸி எனப்படும் நமது பால்வெளி மண்டலம் பல மர்மங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இந்த பால்வெளி மண்டலத்தைக் குறித்த ஆய்வுகள் உலகெங்கும் தீவிர ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.குறிப்பாக அமெரிக்காவின் நாசா பிரபஞ்சம் குறித்த ஆய்வை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் தான் பிரபஞ்ச விரிவாக்கம் குறித்து நாசா சில முக்கிய தகவல்கள் வெளியிட்டுள்ளது.


ஹப்பிள் டெலஸ்கோப்


விண்வெளி குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதில் ஹப்பிள் டெலஸ்கோப் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையங்கள் இணைந்து இந்த ஹப்பிள் டெலஸ்கோப்பில் பல்வேறு ஆய்வுகளைச் செய்து வருகிறது. நமது அண்டம் குறித்த பல மர்மங்களைப் புரிந்துகொள்ளவும் தீர்க்கவும் இந்த டெலஸ்கோப் தான் உதவியுள்ளது. விண்வெளியைச் சுற்றி வரும் இந்த டெலஸ்கோப் 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சேவையில் உள்ளது.


அசாதாரணமான நிகழ்வு


இத்தனை ஆண்டுகளில் ஹப்பிள் டெலஸ்கோப் சுமார் 1.3 பில்லியனுக்கும் அதிகமான சுவாரஸ்யமான நிகழ்வுகளின் புகைப்படங்களை எடுத்துள்ளது. பிரபஞ்சம் எந்த வேகத்தில் விரிவடைகிறது என்பதைக் கண்டறிவதில் இது முக்கியமாகக் கவனம் செலுத்தி வருகிறது. நமது பிரபஞ்சத்தில் அசாதாரணமான நிகழ்வு ஏதோ நடப்பதாக நாசா கூறுகிறது.


முரண்பாடு


பல ஆண்டுகளாக ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் விஞ்ஞானிகளால் பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை இன்னும் துல்லியமாக ஆய்வு செய்ய முடிகிறது. இருப்பினும், நமது பிரபஞ்ச விரிவாக்கத்தில் ஏதோ முரண்பாடு உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நம்மைச் சுற்றி இருக்கும் பிரபஞ்சம் விரிவடையும் வேகம் வித்தியாசமாக இருப்பதாகவும், பிரபஞ்சத்தில் விசித்திரமான ஏதோ ஒன்று நடப்பதாகவும் நாசா கூறுகிறது.


டேட்டாக்கள்


இது ஆய்வாளர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த விசித்திரமான நிகழ்வைப் புரிந்து கொள்ள, அவர்கள் விண்வெளி மற்றும் நேரம் தொடர்பாக ஹப்பிள் டெலஸ்கோப் சேகரித்த தரவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இது நமது பிரபஞ்சத்தின் விரிவாக்க வீதத்தைக் கண்டறிய உதவும். இந்த தரவுகளை மைல்போஸ்ட் டேட்டா என்று ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள். 1990இல் ஹப்பிள் டெலஸ்கோப் செயல்படத் தொடங்கியதில் இருந்து இதுவரை 40க்கும் மேற்பட்ட மைல்போஸ்ட் டேட்டாக்கள் பெறப்பட்டுள்ளது.


வேகம்


ஹப்பிள் டெலஸ்கோப் பயன்பாட்டிற்கு வரும் முன்பு கருத்தியல் ரீதியாக எந்த வேகத்தில் அண்டம் விரிவடைகிறது என்று மதிப்பிடப்பட்டது. அவற்றில் ஒரு மெகாபார்செக்கிற்கு வினாடிக்கு 67.5 கிலோமீட்டர் வேகத்தை அண்டம் விரிவடையும் என ஆய்வாளர்கள் கணித்திருந்தனர். ஆனால், ஹப்பிள் டெலஸ்கோப் வந்ததும் அண்டம் ஒரு மெகாபார்செக்கிற்கு வினாடிக்கு 73 கிலோமீட்டர் வேகத்தில் விரிவடைவதை கண்டறிந்தனர்.'

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459