மத்திய அரசு கூறும் மாஸ்க்டு ஆதார் என்றால் என்ன? பாதுகாப்பானதா? டவுன்லோட் செய்வது எப்படி? முழு தகவல் - ஆசிரியர் மலர்

Latest

 




30/05/2022

மத்திய அரசு கூறும் மாஸ்க்டு ஆதார் என்றால் என்ன? பாதுகாப்பானதா? டவுன்லோட் செய்வது எப்படி? முழு தகவல்


மத்திய அரசு ஆதார் குறித்து முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், மாஸ்க்டு ஆதார் என்றால் என்ன அதை எப்படிப் பயன்படுத்துவதை என்பதைப் பார்க்கலாம்.மத்திய அரசு நேற்றைய தினம் ஆதார் தொடர்பாகச் சுற்றறிக்கை ஒன்றை அளித்திருந்தது. அதாவது ஆதார் புகைப்பட நகலைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதால் அதைப் பகிரும் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தது.மேலும், மோசடிகளில் இருந்து பாதுகாக்க 'மாஸ்க்டு ஆதாரை'( ) பயன்படுத்துமாறும் அதில் மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. இருப்பினும், இந்த அறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளும் ஆபத்து இருப்பதாகக் கூறி இந்த அறிக்கையைத் திரும்பப் பெற்றது. 


மாஸ்க்டு ஆதார்இருப்பினும், பாதுகாப்பு கருதி மாஸ்க்டு ஆதாரையே பயன்படுத்துமாறு வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த மாஸ்க்டு ஆதார் என்றால் என்ன? அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது குறித்துப் பார்க்கலாம். மாஸ்க்டு ஆதார் என்பது என்பது ஆதார் அட்டையின் சிறப்புப் பதிப்பாகும். ஆதார் அட்டை தவறாக மோசடி பயன்பாட்டிற்காகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில்சார்பில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.4 எண்கள் மட்டுமே தெரியும்மொத்தம் இருக்கும் 12 இலக்கு எண்களில் கடைசி 4 எண்கள் மட்டுமே அனைவராலும் பார்க்க முடியும். மாஸ்க்டு ஆதாரில் முதல் 8 எண்கள் மறைக்கப்பட்டு, '-'என்றே இருக்கும். இதில் ஆதார் எண்ணின் கடைசி 4 நம்பர்கள் மட்டுமே தெரியும் என்பதால், பொதுமக்களின் இதர தனிப்பட்ட விவகாரங்கள் மோசடி ஆசாமிகளிடம் இருந்து பாதுகாக்கப்படும்.எங்கிருந்து டவுன்லோட் செய்யலாம்ஆதார் என்பது 12-டிஜிட்டல் அடையாள எண்ணாகும். இது இந்திய குடியுரிமையாளருக்குமூலம் வழங்கப்படுகிறது. மாஸ்க்டு ஆதார் என்பது அதே அட்டைதான் ஆனால் கார்டில் உள்ள முதல் எட்டு எண்களை மறைக்கப்பட்டு கடைசி நான்கு எண்களை மட்டும் தெரியும். இது கூடுதல் பாதுகாப்பைத் தரும். மாஸ்க்டு ஆதாரை அதிகாரப்பூர்வபோர்ட்டலில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.டவுன்லோட் செய்வது எப்படி?மாஸ்க்டு ஆதாரை டவுன்லோட் செய்ய யுஐடிஏஐ அதிகாரப்பூர்வ இணையதளமான ://.../ க்கு செல்லவும். அதில் லாக்இன் செய்து, ஆதார் எண்ணைப் போட்டு, ஒடிபி பெறவும் ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒடிபி அனுப்பப்படும்..மூலம் லாகின் செய்யவும். அதில்க்கு சென்று ' 'ஐ கிளிக் செய்யவும் -ரிவ்யூ செக்ஷனுக்கு சென்று,'? என்ற ஆப்ஷனில் ஆமாம் என்பதை கிளிக் செய்யவும் -அதன் பிறகு டவுன்லோட் செய்யப்படும் ஆதார் அட்டை மாஸ்க்டு ஆதராகவே இருக்கும்.மாஸ்க்டு ஆதார் அவசியமாமோசடி மற்றும் தனிப்பட்ட தகவல்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க மாஸ்க்டு ஆதார் அவசியம் ஆகிறது. மத்திய அரசு சமீபத்தில் அறிக்கையிலும் கூட, ஆதார் அட்டையை நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தும் ஆபத்து இருப்பதால் மாஸ்க்டு ஆதாரை மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு இடங்களிலும் இப்போது ஆதார் அட்டை கேட்கப்படும் நிலையில், மத்திய அரசின் இந்த எச்சரிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ‘ 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459