பணம் செலுத்துவதற்கு நம்மில் பெரும்பாலோர் யுபிஐ-ஐப் பயன்படுத்துகிறோம். ஏனெனில் இது மிக வேகமாகவும் எந்த தொந்தரவும் இல்லாமல் பணத்தை அனுப்ப உதவுகிறது.
பிரபலமான உடனடி செய்தியிடல் செயலியான பணம் அனுப்பும் மற்றும் பெறும் வசதியைச் சேர்த்துள்ளது. இந்த வசதி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பணம் அனுப்புவதை எளிதாக்குகிறது. யுபிஐ மூலம் செய்யப்படும் இந்த கட்டண முறையில், கியூஆர் குறியீடு மட்டுமே தேவைப்படும், பணம் உடனடியாக மாற்றப்படும்.
ஒரே காலில் ஹேக் செய்யப்பட்ட கணக்கு
வாட்ஸ்அப்பில் பல நிதி மோசடிகள் நடக்கின்றன. சமீபத்தில் இதற்கான ஒரு உதாரண நிக்ழவும் நடந்துள்ளது. 8420509782 ‘ஏர்டெல்’ என்ற எண்ணில் இருந்து ஒரு பயனருக்கு ஒரு கால் வந்துள்ளது.
இணையச் சிக்கல் தொடர்பாகப் புகாரைப் பதிவு செய்திருப்பதாக கால் செய்தவர் பயனருக்குத் தெரிவித்தார். குடும்பத் திட்டத்தின் காரணமாக ஏர்டெல் தொடர்பான அனைத்து அழைப்புகளையும் அவரது தந்தை கையாள்வதாக மோசடியாளரிடம் கூறிய பயனர், அப்போது அவர் தந்தை வீட்டில் இல்லை என்றும் பின்னர் அழைக்குமாறும் கூறினார்.
இதன் பின்னர் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. கால் செய்தவர் பயரிடம் ‘401*8404975600’ ஐ டயல் செய்யுமாறும், அதன் பிறகு ஏர்டெல் கால் சென்டரில் இருந்து 1-2 நாட்களில் மீண்டும் அழைப்பு வரும் என்றும் கூறினார். வலையில் விழுந்த வாட்ஸ்அப் பயனர் அந்த எண்ணுக்கு டயல் செய்தார்.
மோசடி நபர் 10 நிமிடங்களில் கணக்கில் நுழைந்தார்
அடுத்து நடந்த விஷயம் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ஏனென்றால் அழைப்புக்குப் பிறகு 10 நிமிடங்களுக்குள், வாட்ஸ்அப்பில் பயனருக்கு ஒரு செய்தி வந்தது. அதன் மூலம் அவர் தனது மொபைல் எண்ணை புதிய சாதனத்தில் அமைக்க லாக் இன் பின் பற்றி கோரப்பட்டது. சில நொடிகளில், பயனர் தொலைபேசி மற்றும் மடிக்கணினி இரண்டிலிருந்தும் வாட்ஸ்அப்பில் இருந்து லாக் அவுட் ஆனார்.
இதனல் பயனர் குழப்பத்தில் ஆழ்ந்தார். இறுதியில் வாட்ஸ்அப்பில் இருந்த அனைத்து தொடர்புகளையும் அவர் இழந்தார்.
பயனர் அந்த கோடை டயல் செய்தததன் மூலம், மோசடி நபர் பயனரின் அனைத்து இன்கமிங் கால்களின் அணுகலையும் பெற்றார். பயனரின் சிம் கார்ட் மோசடி நபரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது.
நண்பர்களிடம் பணம் கேட்கப்பட்டது
இதன் பின்னர், மோசடி நபர் பயனரின் வாட்ஸ்அப்பில் உள்ள 40-50 க்கும் மேற்பட்ட தொடர்புகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதை அவர் அறிந்து முற்றிலும் அதிர்ச்சியடைந்தார். பயனரின் சார்பாக அவரது நண்பர்கள் மற்றும் தொடர்பில் இருந்த பலரிடம் பணம் கேட்கப்பட்டிருந்தது. ரொக்கமாகவும், பேடிஎம் மூலமாகவும் உதவ கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
பயனரின் நண்பர்கள் சிலர் மோசடி நபருக்கு ரூ.1000, ரூ.2000 என பணம் அனுப்பினர். இதை பற்றி கேள்விப்பட்ட பிறகு பயனர் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார்.
வாட்ஸ்அப் பண மோசடியை எவ்வாறு தவிர்ப்பது:
– உங்கள் வாட்ஸ்அப்பில் இரண்டு காரணி அங்கீகாரத்தை(டூ ஃபாக்டர் ஆதரைசேஷன்) இயக்கவும்.
– இந்த வழியில், ஓடிபி-ஐ பெற்றாலும் மற்றவர்களால் லாக் இன் செய்ய முடியாது.
– அழைப்பிற்கான குறியீடாக ‘401’ ஐத் தொடர்ந்து 10 இலக்க மொபைல் எண்ணை டயல் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், இது கால் மாற்றத்திற்கான (கால் ஃபார்வர்ட்) குறியீடாகும்.
– / தெரியாத தொலைபேசி அழைப்பை எடுத்து அதிகம் பேசதீர்கள். அவர்கள் சொல்வதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டாம்.
15/05/2022
New
வாட்ஸ்அப் மோசடி எச்சரிக்கை:
About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
whatsapp
Labels:
whatsapp
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment