இந்த செயலிகள் இனிகூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது - ஆசிரியர் மலர்

Latest

 




15/05/2022

இந்த செயலிகள் இனிகூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது

கூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால், அழைப்பு பதிவு செய்யும் ரெக்கார்டிங் செயலிகள் இனி வேலை செய்யாது. ட்ரூகாலர் உள்ளிட்ட பிற ஆப்ஸைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு போன்களில் அழைப்புகளைப் பதிவு செய்ய முடியாது. கூகுள் நிறுவனம் எடுத்துள்ள இந்த கொள்கை முடிவு மே 11 ஆம் தேதியான இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த விதிமுறைகளின்படி, மூன்றாம் தரப்பு அழைப்பு செயலிகளான ரெக்கார்டிங் செயலி மூலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் அழைப்பை பதிவு செய்ய முடியாது. பாதுகாப்பு காரணங்களுக்காக கால் ரெக்கார்டிங் செயலி நிறுத்தப்படுவதாக கூகுள் கூறுகிறது. கால் ரெக்கார்டிங் ஆப் பல டெவலப்பர்கள் நியாயமற்ற முறையில் பல அனுமதிகளைப் பெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. அவை தனிநபர் பாதுகாப்புகளுக்கும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. மேலும், இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. கால் ரெக்கார்டிங் ஆப் தொடர்பான சட்டம் நாட்டுக்கு நாடு மாறுபடும். இந்த சட்டங்களை செயலிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. சில செயலிகள் விருப்பும் அனுமதியை சில நாடுகள் கொடுக்க மறுக்கின்றன. இந்த சட்ட நடைமுறைகள் கூகுளின் செயல்பாட்டுக்கு தொடர்ச்சியாக பிரச்சனைகளை கொண்டு வருவதால் கூகுள் நிறுவனம் இத்தகைய முடிவுகளை எடுத்துள்ளது. அதேநேரத்தில், ஸ்மார்ட்போன்களிலேயே இருக்கும் அழைப்பு பதிவு செய்யும் செயலிகள் தொடர்ந்து செயல்படும். அவற்றில் எந்த மாறுபாடும் இருக்காது. கூகுளின் புதிய நடைமுறையால் மூன்றாம் தரப்பு செயலிகளைக் கொண்டு கால் ரெக்கார்டிங் பயன்படுத்துபவர்களுக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது. அவர்கள் இனி தங்கள் ஸ்மார்ட்போனில் கால் ரெக்கார்டிங் செய்ய முடியாது. மாறாக, கால் ரெக்கார்டிங் அம்சம் கொண்ட புதிய ஸ்மார்ட்போனை அவர்கள் வாங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கூகுள் எடுத்துள்ள இந்த முடிவு வர்த்தக ரீதியாக ஸ்மார்ட்போன் சந்தையில் கணிசமான விற்பனையை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459