ஸ்மார்ட்போன் கவனிக்க வேண்டிய முக்கியமான5 விஷயங்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/05/2022

ஸ்மார்ட்போன் கவனிக்க வேண்டிய முக்கியமான5 விஷயங்கள்

ஸ்மார்ட்போன்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது, அதற்கேற்ப பல நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு பலவிதமான அம்சங்கள் பொருந்திய ஸ்மார்ட்போன்களை சந்தைகளில் களமிறக்கி வருகிறது. ஆண்ட்ராய்டு போன்கள், என பலரும் பல விருப்பங்களில் போன்களை வாங்க தொடங்கிவிட்டனர். இருப்பினும் எந்த பிராண்டு மொபைல்களை வாங்குவது, கேஷ்பேக் ஆஃபர் எவ்வளவு இருக்கும், இஎம்ஐ போன்றவற்றை தேர்வு செய்வதில் பலரும் குழப்பம் அடைகின்றனர். ஸ்மார்ட்போன்களை வாங்குவது பெரிதல்ல, அதனை வாங்கும் முன் நாம் சில விஷயங்களை கவனத்தில் வைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் தான் ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்யவேண்டும். தற்போது வாங்கும்போது நாம் தவிர்க்கவேண்டிய 5 முக்கியமான விஷயங்கள் பற்றி இங்கே காண்போம். 1) ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இவற்றை பற்றிய குழப்பங்கள் பெரும்பாலான மக்களிடையே காணப்படுகிறது, இவை இரண்டும் வெவ்வேறு தளங்களை அடிப்படையாக கொண்டவையாகும். ஐபோன் ஆனது சிம்ப்ளிசிட்டி மற்றும் ப்ரைவசியை பொறுத்தது, ஆண்ட்ராய்டு போன் ஆனது சாய்ஸ் மற்றும் கண்ட்ரோல் பற்றியது. எந்த போன்களை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்பதை முதலில் நீங்கள் உறுதிப்படுத்தி கொண்டு அதன்பின்னரே மொபைலை தேர்வு செய்யவேண்டும். 2) நீங்கள் வாங்கப்போகும் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை முன்பே சிந்தித்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வாங்கும் போன் நிச்சயம் உங்களுக்கும் உங்களது பணிகளுக்கும் பொருத்தமானது தானா என்பதை தெரிந்துகொள்ளுங்கள். சிலர் சரியான ஐடியா இல்லாமல் தவறான ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்துவிடுகின்றனர், அவ்வாறு இல்லாமல் சிறப்பான வீடியோ குவாலிட்டி, மெசேஜிங் வசதியுடன் உங்களது தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய குறைந்த விலையில் இருக்கும் போன்களை வாங்கலாம். 3) ஒரு நிறுவனமானது அதன் மொபைல்களை பற்றி எப்படி வேண்டுமானாலும் விளம்பரப்படுத்தலாம், ஆனால் அதனை பயன்படுத்திய பிறகு தான் அந்த மொபைல் எப்படி இருக்கிறது என்பது நமக்கு தெரியும். அதனால் அதிக விலைக்கு விற்கும் மொபைலை வாங்கினால் தான் பயன்படுத்த நன்றாக இருக்கும், குறைந்த விலைகொண்ட மொபைல்கள் சிறப்பான அனுபவத்தை தராது என்று நம்பவேண்டாம். விலைக்கும் மொபைலுக்கு எவ்வித தொடர்பும் இல்லை, நமது தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நமக்கு வேண்டிய சிறப்பம்சம் கொண்ட மொபைல்கள் குறைந்த விலையில் விற்றால் அதனை நாம் வாங்கிக்கொள்ளலாம். 4) பல நிறுவனங்கள் புதிய ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகின்றது, ஆனால் எந்த நேரத்தில் போன்களை வாங்குவது சரியானதாக இருக்கும் என்கிற கேள்வி பலருக்கும் உள்ளது. உதாரணமாக ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் ஒரு புதிய போனை அறிமுகபடுத்துகிறது என்றால், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் புதிய போனை வாங்கியவர்களுக்கு அது மோசமான நேரம் என்று கூறப்படுகிறது. பழைய மாடல் ஐபோன்களை வாங்க விரும்புவார்கள் வருடத்தின் கடைசியில் அல்லது பண்டிகை காலத்தில் வாங்கலாம், ஏனெனில் அந்த நேரத்தில் சிறந்த தள்ளுபடியில் மொபைல்கள் கிடைக்கும். அதனால் சரியான நேரத்தை எதிர்பார்த்து மொபைல் வாங்குவது புத்திசாலித்தனமானதாகும். 5) புதிய ஸ்மார்ட்போன்கள் வாங்கும்போது அதன் சாஃப்ட்வேர் அப்டேட்டுகளை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். 4-5 வருடங்களுக்கு உங்கள் போனை வைத்திருக்க விரும்பினால் அதன் ஓஎஸ் நிலை போன்ற பல்வேறு அப்டேட்டுகள் பற்றி கணக்கில் கொள்ள வேண்டும், எந்த பிராண்டு போன் நிலைத்துநிற்கக்கூடியதாக உறுதியளித்துள்ளது என்பதனை சரிபார்த்து வாங்க வேண்டும். சமீபத்தில் சாம்சங் கேலக்சி 4 வருடங்களுக்கு நீடித்து நிலைக்கும் வகையிலான போன்களை அறிமுகம் செய்தது, இது சாம்சங் போன்களின் விற்பனையை அதிகரிக்க உதவும் ஒரு வழியாகும். எந்தவொரு போன் வாங்கும்போதும் அதன் சாஃப்ட்வேர் அப்டேட்டுகளை கருத்திற்கொண்டு வாங்க வேண்டும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459