பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்: எம்.எல்.ஏக்களின் குடும்ப ஓய்வூதியத்திற்கு ரூ. 40 கோடி செலவாகிறது : நிதியமைச்சர் - ஆசிரியர் மலர்

Latest

 




 


08/05/2022

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்: எம்.எல்.ஏக்களின் குடும்ப ஓய்வூதியத்திற்கு ரூ. 40 கோடி செலவாகிறது : நிதியமைச்சர்

 


சென்னை, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து பேசிய அவர், 2003-ம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வூதியத் தொகை அரசுக் கணக்கில் இருந்ததாக கூறினார். இதனால் அதை எடுத்து பயன்படுத்த முடிந்ததாக தெரிவித்தார். 2004-ம் ஆண்டு புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு ஓய்வூதிய பங்களிப்பு தனிநபர் பணமாக அவர்களது வங்கிக்கணக்கில் வைக்கப்பட்டிருக்கிறது. தனிநபரின் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை மீண்டும் அரசு எடுத்து செலவழிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்தார். அதில் பிழை இருப்பதாக தெரிவித்த அவர், இதுகுறித்து சிந்திக்கப்பட வேண்டும் என்று கூறினார். எம்.எல்.ஏக்களின் குடும்ப ஓய்வூதியத்திற்கு ரூ. 40 கோடி செலவாகிறது என்று கூறிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இதுகுறித்து முதல் அமைச்சர் முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459