TET - இலட்சகணக்கான இளைஞர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/04/2022

TET - இலட்சகணக்கான இளைஞர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு.

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பிக்கும் இணையதளம் முடங்கிய நிலையில் கால அவகாசம் முடிந்ததால் இலட்சகணக்கான இளைஞர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு கூடுதல் அவகாசம் தர தமிழக அரசுக்கு வேண்டுகோள்.

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் முடங்கியதால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தயாரான மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆன்லைன் வழியாக மார்ச் 13 முதல் ஏப்ரல் 13 வரை விண்ணப்பிக்குமாறு கூறியிறுந்தது. ஆனால் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் சர்வர் பிரச்சனையால் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் சரிவர இயங்கவில்லை.
விண்ணப்பங்களை பதிவு செய்தவர்களின் செல்போனுக்கு ஓ.டி.பி வராததால் ஆயிரக்கணக்கானவர் இணையதள மையத்தில் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக காத்துக் கிடந்தனர். 

தேர்வுவுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான ஏப்ரல் 13 ஆம் தேதியும் அதற்கு முந்தைய நாட்களிலும் இணையதளம் முற்றிலும் முடங்கியது. 

ஏற்கனவே முதல் இரண்டு நிலைகளை நிறைவு செய்தவர்கள் தங்கள் கல்வித்தகுதி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியாமல் தவித்தனர். குறிப்பாக இணைய தள வசதியில்லாத கிராமபுற , ஏழை எளிய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.

இந்நிலையில் இணைய தள கோளாறு சரி செய்யப்பட்டு தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 13 நள்ளிரவுவுடன் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிந்ததாக ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது. 

வங்கி , இரயில்வே, தபால் துறை போன்ற மத்திய அரசு வேலைகளில் வடமாநிலத்தவர் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் நிலையும் தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்று அரசு பணிக்கு செல்லலாம் என எண்ணியிருந்த லட்சகணக்கான இளைஞர்கள் கனவு ஆசிரியர் தேர்வு வாரிய நடவடிக்கைகளால் சிதைந்துள்ளது.

  இணையதள கோளாரை சரிசெய்து கால அவகாசத்தை நீட்டிக்க எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.ப. வெங்கடேசன், தமிழக வாலிபர் சங்கத்தினர் , தேர்வுக்கு தயாரான மாணவர்கள் பலர் சமூக வலைதளம் வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இறுதி வரை இணையதளம் சரி செய்யப்படாமல் தேர்வுக்கான கால அவகாசம் முடிந்தது.

செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடைசி வாரங்களில் 1.5 இலட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பித்துள்ளதாக கூறுயுள்ளார். அது அதிவேக இணையதள வசதியுள்ள பகுதிகளிலிருந்து விண்ணப்பித்திருக்கலாம். ஆனால் கிராபுற இணையதள வசதி , இணையதள வேகம் குறைந்த பகுதியில் உள்ளவர்கள் ஏற்கனவே சரிவர இயங்காத சர்வர் கோளாறு அடைந்த இணையதளத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் போனதை எண்ணி பார்க்க வேண்டும் , கால அவகாசம் வழங்காமல் தேர்வை நடத்துவது லட்சகணக்கானோரை தேர்வில் பங்கேற்க விடாமல் ஒதுக்கி வைத்து பாரபட்சத்துடன் நடத்துவது போல் ஆகும் என பாதிக்கப்பட்டோர் ஆதங்கத்துடன் கூறுகின்றனர். 

இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பிக்க மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட வர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 




No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459