PG Entrence Exam : விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


19/04/2022

PG Entrence Exam : விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

 முதுநிலை படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வுக்கு, 21ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலை உள்ளிட்ட பல்வேறு பல்கலைகளின் இணைப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., - எம்.பிளான்., - எம்.சி.ஏ., போன்ற படிப்புகளில் சேருவதற்கான நுழைவு தேர்வை, தமிழக அரசின் சார்பில், மார்ச்சில் அண்ணா பல்கலை அறிவித்தது. 


இந்த தேர்வு மே 14, 15ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்றுடன் முடியவிருந்த நிலையில், வரும் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விபரங்களை, https://tancet.annauniv.edu/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459