மேற்காண் பொருள் சார்ந்து கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையத்தில் (EMIS) அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்களின் தினசரி வருகைப் பதிவை கீழே குறிப்பிட்டுள்ளவாறு பதிவுகள் மேற்கொள்ள வேண்டுமென ஆணையிடப்படுகிறது.
> ஆசிரியர்களின் வருகைப்பதிவை தலைமையாசிரியர் மேற்கொள்ள வேண்டும்.
> மாணவர்களின் வருகைப் பதிவு சார்ந்த வகுப்பு ஆசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும்,
ஏதாவது ஒரு வகுப்பாசிரியர் பள்ளிக்கு வருகை புரியாத பட்சத்தில் அவ்வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவினை அப்பள்ளித் தலைமையாசிரியரே மேற்கொள்ள வேண்டும்.
> மாணவர்களின் கற்றல் - கற்பித்தல் பாதிக்கா வண்ணம் அன்றைய தினமே வருகைப் பதிவினை முடித்திடல் வேண்டும். - பள்ளிகளில் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் பணிபுரியவில்லையெனில், கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் (EMIS) இணையதள வருகை பதிவில் 0 என பதிவு செய்ய வேண்டும்.
- ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவினை தினந்தோறும் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையத்தில் மேற்கொள்வதை தலைமையாசிரியர் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
- கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் பள்ளிகள் சார்ந்த அனைத்து அடிப்படை விவரங்களுக்கான பதிவுகள் சரியாக மேற்கொள்ளப்பட்டதை தலைமையாசிரியர் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதால் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அம்மாணவர்கள் பயின்ற பள்ளிகளின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
- EMIS மூலம் வருகைப் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானதாக உள்ளதால், தினந்தோறும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவிற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறும், தவறும் பட்சத்தில் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் வகுப்பாசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment