அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ள வழிகாட்டுதல்கள்:ஜாதி சான்றிதழை பொறுத்தவரை, பழைய அட்டை வடிவிலான சான்றிதழ் இருந்தால் போதுமானது. தற்போது வழங்கப்படும் 'ஆன்லைன்' வழி சான்றிதழும் ஏற்றுக் கொள்ளப்படும்.
ஆன்லைன் சான்றிதழ் வைத்துள்ளோர், அட்டை வடிவ சான்றிதழ் பெற வேண்டியதில்லை.ஜாதி சான்றிதழில் கணவர் பெயர் அல்லது கணவர் சார்ந்த ஜாதி பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தால், அந்த சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படாது.பெற்றோர் கலப்பு திருமணம் செய்திருந்தால், தந்தை அல்லது தாய் சார்ந்த ஜாதி பெயரில், சான்றிதழ் பெறலாம்.
ஜாதி சான்றிதழில், தந்தை பெயர் திருத்தப்பட்டு இருந்தால், பெயர் மாற்றம் குறித்து, அரசிதழ் பதிவின் அடிப்படையில் ஏற்கப்படும். ஏற்கனவே வைத்திருந்த ஜாதி சான்றிதழ் தொலைந்து, புதிய சான்றிதழ் பெற்றிருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெண் தேர்வர்களில் பலர் திருமணமானவராக இருந்தால், அவர்களுக்கு சில இடங்களில் கணவர் பெயருடன் ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. அவர்கள், டி.என்.பி.எஸ்.சி., பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டால், தந்தை பெயர் இல்லாமல், கணவர் பெயர் உள்ள ஜாதி சான்றிதழ்கள், இடஒதுக்கீடு முறைக்கு ஏற்கப்படுவதில்லை.எனவே, ஜாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் திருமணமான பெண்கள், அவர்களின் தந்தை பெயருடன் சேர்த்து சான்றிதழ் வழங்குமாறு, வருவாய்த் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment