வாசிப்பை நேசிப்போம்.. உலக புத்தக தினம் - ஆசிரியர் மலர்

Latest

 




23/04/2022

வாசிப்பை நேசிப்போம்.. உலக புத்தக தினம்


 தன்னை தூக்கிலிட அழைத்தபோது தான் படித்து கொண்டிருந்த புத்தகத்தை முடித்துவிட்டு வருகிறேன் என சாகும் தருவாயில் கூட புத்தகம் வாசித்தார் மாவீரன்

*பகத்சிங்*


தன் வாழ்நாளில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை படித்து தன் படுக்கை அறைக்கு அருகிலேயே ஒரு நூலகம் வைத்திருந்தார் 

*டாக்டர்.அம்பேத்கர்*


பெண்களிடம் கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகத்தை கொடுத்தால் போதும் என்றார் 

*தந்தை பெரியார்*


இலண்டன் நூலகத்தில் இருபது ஆண்டுக் காலம் படித்து ஆய்வு செய்து பின்னாளில் பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாக விளங்கினார் 

*கார்ல் மார்க்ஸ்*


புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கி களைவிட புத்தகங்களே பெரிய ஆயுதங்கள் என்றார் புரட்சியாளர் 

*லெனின்*


மரண தண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு தனக்குக் கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டே இருந்தாராம் கிரேக்க நாட்டுச் சிந்தனையாளர் 

*சாக்ரடீஸ்*


தான் மறைந்த பின் தமது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்கக்கூடாது, புத்தகங்கள்தான் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம் 

*ஜவகர்லால் நேரு*


ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என சொன்னாராம் 

*காந்தியடிகள்*


 அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் மருத்துவர்கள் இன்று உங்களுக்கு அறுவைச் சிகிச்சை என்றபோது, தாம் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும் வரை அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்னாராம் 

*அறிஞர் அண்ணா*


ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரம் படிப்பதிலும், படித்ததைச் சிந்திப்பதிலும் செலவிட்டாராம் முன்னாள் குடியரசுத் தலைவர் 

*டாக்டர் இராதாகிருஷ்ணன்*


ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்குப் புத்தகம் வாங்குவாராம் 

*சார்லி சாப்ளின்*

 

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக் கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் 

*மார்டின் லூதர்கிங்*


ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் 

*வின்ஸ்டன் சர்ச்சில்*


வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் 

*நெல்சன் மண்டேலா*


நான் படிக்காத புத்தகம் ஒன்றை எனக்கு தருபவர்களே எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் என்றார் 

*ஆபிரகாம் லிங்கன்*


ஒரு நூலகம் திறக்கப்படும்போது 100 சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்கிறார் 

*விவேகானந்தர்*


 ‘கற்றனைத்தூறும் அறிவு’ என்றார் *திருவள்ளுவர்*


வாசிப்பை நேசிப்போம்..

*உலக புத்தக தினம்*

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459