அமவுண்ட் திருடும் ஆண்டிவைரஸ் ஆப்கள்! அதிரடியாய் நீக்கிய கூகுள்! எதுக்கும் உங்க போனை செக் பண்ணிக்கங்க - ஆசிரியர் மலர்

Latest

 




09/04/2022

அமவுண்ட் திருடும் ஆண்டிவைரஸ் ஆப்கள்! அதிரடியாய் நீக்கிய கூகுள்! எதுக்கும் உங்க போனை செக் பண்ணிக்கங்க


  பயனர்களின் செல்போன்களுக்கு மால்வேரை டெலிவரி செய்த 6 போலி ஆண்டிவைரஸ் ஆப்களை ப்ளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கியுள்ள நிலையில், பயனர்கள் கண்டிப்பாக பதிவிறக்குவார்கள் என்ற நம்பிக்கையில் ஹேக்கர்கள் போலி ஆண்டி வைரஸ் ஆப்களை உருவாக்கியுள்ளனர் என்று பாதுகாப்பு நிறுவனமான செக் பாயிண்ட் கூறியுள்ளது.இன்றைய உலகில் கை இல்லாமல் கூட இருந்து விடலாம் ஆனால் கையில் செல்போன் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது என்ற நிலையில் தான் பலரும் உள்ளனர். அந்த அளவுக்கு செல்போன் நம்மை ஆக்கிரமித்துள்ளது.காலையில் எழுந்திருக்க அலாரம் முதல் இரவு தூங்க இளையராஜா பாடல்கள் வரை வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறியுள்ளன ஆண்ட்ராய்டு போன்கள். இதற்காக நூற்றுக்கணக்கான ஆப்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆபத்தான ஆப்கள்ஆண்ட்ராய்ட் மொபைல்களை பயன்படுத்துவோர் தங்களுக்கு தேவையான பல்வேறு அப்ளிகேஷன்களை தாங்கள் வைத்திருக்கும் கூகுள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி, கூகுள் நிறுவனத்தில் ப்ளேஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேவையைப் பொருத்து பணம் செலுத்தி பயன்படுத்தும் அப்ளிகேஷன்களும் ப்ளே ஸ்டோரில் உண்டு. ஐஓஎஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் உள்ள ஆப்பிள் போன் பயனர்கள் அதற்கான ஸ்பெசல் ஆப்களை பதிவிறக்கிக் கொள்கின்றனர்.கூகுள் ப்ளே ஸ்டோர்ஆனால் அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் ஆப்கள் உண்மையில் நம்பகத்தன்மை வாய்ந்தது தானா? என்பதை நாம் சோதிக்க வேண்டும். கூகுள் ப்ளேஸ்டோர் அல்லாத ஏபிகே ஆப்கள் என்றுமே போனுக்கு ஆப்புதான் வைக்கும். பணம் மட்டுமல்லாது தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை திருடி நமக்கே எதிராக திரும்பவும் வாய்ப்புகள் உண்டு.மால்வேர் ஆபத்துஇந்நிலையில் தான் பயனர்களின் செல்போன்களுக்கு மால்வேரை டெலிவரி செய்த 6 போலி ஆண்டிவைரஸ் ஆப்களை ப்ளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கியுள்ள நிலையில், பார்ப்பதற்கு அச்சு அசலாக உண்மையான ஆன்டி வைரஸ் ஆப்கள் போல இருப்பதால் பயனர்கள் கண்டிப்பாக பதிவிறக்குவார்கள் என்ற நம்பிக்கையில் ஹேக்கர்கள் போலி ஆன்டி வைரஸ் ஆப்களை உருவாக்கியுள்ளனர் என்று பாதுகாப்பு நிறுவனமான செக் பாயிண்ட் கூறியுள்ளது. 6 ஆப்கள் நீக்கம்பாதுகாப்பு நிறுவனமான செக் பாயிண்ட் அறிக்கையின் படி, "ஆன்டிவைரஸ், சூப்பர் கிளீனர்," "சென்டர் செக்யூரிட்டி - ஆன்டிவைரஸ்" மற்றும் "பவர்ஃபுல் கிளீனர் ஆன்டிவைரஸ்" ஆகியவை அடங்கும். ஆனால் உண்மையில் நிரல்கள் "" என அழைக்கப்படும் தீம்பொருளை வழங்குகின்றன, இது உங்கள் பாஸ்வேர்ட், யூசர் நேம் மற்றும் வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களைத் திருடலாம். மொத்தத்தில், 15,000 முறை ஆப்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டன. தகவல்கள் பறிபோன நிலையில், செக் பாயின்ட் நிறுவனத்திடம் புகாரளிக்கப்பட்டது.கவனம் தேவைஇதையடுத்து ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் ஆறு ஆப்களையும் நீக்கியுள்ளது. உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனுக்கு ஆன்டி வைரஸ் ஆப்கள் தேவைப்பட்டால், அது முறையானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முக்கியமாக இந்த ஆப்கள் இருந்தால் உடனடியாக அவற்றை அன்இன்ஸ்டால் செய்வது நல்லது. 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459