அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு / அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் சார்பாக ஆணை வெளியிடப்பட்டு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்காண் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி பள்ளிக் கல்வித் துறையில் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்வி அலகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் சார்பான நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்களில் ஒட்டுமொத்த ஒன்றியங்களில் அதிகளவு எண்ணிக்கையில் காலிப்பணியிடம் உள்ள ஒன்றியங்களிலிருந்து 10 விழுக்காடுகளுக்கு மிகாமல் முன்னுரிமை ஒன்றியங்களாக ( Priority Block ) தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு கீழ்க்கண்டவாறு 40 ஒன்றியங்கள் முன்னுரிமை ஒன்றியங்களாக அறிவித்து பார்வை -2 ல்காணும் செயல்முறைகளின்படி.ஏற்கனவே முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்வரும் வட்டாரங்களுக்கு மட்டுமே அலகு விட்டு அலகு மாறுதல் வழங்கப் படும்.மற்ற ஒன்றியங்களுக்கு அலகு விட்டு அலகு மாறுதல் வழங்கப்பட மாட்டாது.
No comments:
Post a Comment