ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நியமனம் செய்யும் பணிகளை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., மேற்கொண்டு வருகிறது. வாரியம் நடத்திய பல்வேறு தேர்வுகளில் முறைகேடுகள் நடந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், ஆசிரியர் தேர்வு வாரியம் சீரமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளுக்கு, வல்லுனர் குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும்; அந்த குழுவின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு வருதாகவும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment