தமிழகத்தில் பரவலாக மழை! இன்றும், நாளையும் இடி, மின்னலுடன்.. மழைக்கு வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




17/04/2022

தமிழகத்தில் பரவலாக மழை! இன்றும், நாளையும் இடி, மின்னலுடன்.. மழைக்கு வாய்ப்பு

 


திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்பட தமிழகத்தில் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. மேலும் இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.தமிழகத்தில் சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பல இடங்களில் இடி, மின்னலுடன் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இதனால் கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தப்பித்து வருகின்றனர்.இந்நிலையில் தான் லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நேற்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. பரவலாக மழைஅதன்படி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான நேதாஜி நகர், நியு டவுன், ஜனதாபுறம், செட்டியப்பனூர் உள்ளிட்ட இடங்களில் இரவு 1 மணிநேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் போல் ஓடியதால் வாகனங்கள் மழைநீரில் ஊர்ந்து சென்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சுற்றுவட்டா பகுதிகளில் திடீர் மழை பெய்தது. கடும் வெயிலால் அவதிப்பட்ட மக்கள் மகிழ்ச்சிடையந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மணலூர் பேட்டை, திருப்பாலபந்தல் , லாவாபேட்டை பகுதிகளில் நேற்று இரவில் இடி மின்னலுடன் ஒருமணிநேரம் கனமழை பெய்தது. இதுதவிர வேறு சில மாவட்டங்களையும் சேர்த்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.இன்று கனமழைஇந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த ஒரு மணிநேரத்துக்கு மழை நீடிக்கும் எனவும், சில இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதவிர இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நாளை, நாளை மறுநாள்நாளை மறுநாள் (ஏப்ரல் 19) தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் ஏப்ரல் 20ல் கடலோர தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.சென்னையில் எப்படிசென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசாக இருக்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459