முக்கியமான ஆவணங்களை அனுப்ப, மின்னஞ்சல்களை பெறவும் அல்லது அனுப்பவும் இது பயன்படுகிறது. பொதுவாக எல்லா செயலிகளை போலவே ஜிமெயிலும் இணைய வசதியுடன் இயங்குகிறது. ஆனால் ஜிமெயிலில் சில மறைக்கப்பட்ட அம்சங்கள் உள்ளன.. எனினும் இதுகுறித்து பலருக்கும் தெரியாது. அந்த வகையில் இண்டர்நெட் வசதி இல்லாமல் ஜிமெயிலைப் பயன்படுத்தக்கூடிய ஒரு தந்திரத்தை தற்போது பார்க்கலாம்.
இணையம் இல்லாமல் உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப்பில் ஜிமெயிலை இயக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்ற வேண்டும்.
முதலில் உங்கள் சாதனத்தில் Chrome 61 ஐப் பதிவிறக்கவும்.
ஜிமெயிலுக்குச் சென்று மேல் வலது மூலையில் உள்ள Settings ஐகானை கிளிக் செய்யவும்.
அதன் கீழே See All Settings என்பதைக் கிளிக் செய்யவும்.
அதன் பிறகு உங்கள் முன் ஒரு டேப் திறக்கும்.
இதில் பல விருப்பங்கள் தெரியும், இதில் offline என்ற விருப்பம் இருக்கும்..
இப்போது Enable Offline விருப்பத்தை டிக் செய்து Save என்பதைக் கிளிக் செய்யவும்.
இந்த வழியில் ஆஃப்லைன் அம்சங்கள் உங்கள் ஜிமெயிலில் செயல்படுத்தப்படும் மற்றும் நீங்கள் எளிதாக மெயில்களைப் படிக்கவும், பெறவும், அனுப்பவும் முடியும்.
No comments:
Post a Comment