6 வயது முதல் 12 வயது குழந்தைகளுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி- பிரதமர் நரேந்திர மோடி - ஆசிரியர் மலர்

Latest

 




 


27/04/2022

6 வயது முதல் 12 வயது குழந்தைகளுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி- பிரதமர் நரேந்திர மோடி


கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறைந்திருந்தது. இதனால் கொரோனா நம்மை விட்டு போய்விட்டது என ஆசுவாசமடைந்தோம். கொரோனா கட்டுப்பாடுகளும் பல மாநிலங்களில் விலக்கிக் கொள்ளப்பட்டன.

கொரோனா எண்ணிக்கை


ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அது போல் கர்நாடகா, தமிழகத்திலும் அதிகரித்து வருவதால் முகக் கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா பரவல்


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முன் தினம் முதல்வர் ஸ்டாலின் சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது முகக் கவசம் கட்டாயம் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு எவ்வளவு

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சரம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி ஒரு நாளில் 2 ஆயிரத்து 483 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதுவரை கொரோனா பாதிப்பானது 4.30 கோடியாக அதிகரித்துள்ளது. புதிதாக 1,347 பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது.இன்று பிரதமர் ஆலோசனைநாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 12 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் கொரோனா பாதிப்பு, தடுப்பூசி போடும் பணி, பூஸ்டர் தடுப்பூசி குறித்தெல்லாம் ஆலோசிக்கப்படுகிறது. தமிழகம் சார்பில் முதல்வர் ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459