மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 முடித்து, பல்வேறு நுழைவு தேர்வுகளில் பங்கேற்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரபல கல்லுாரிகளில் உயர்கல்வியில் சேர, தேவையான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில், தேர்வுக்கு தயாராவதற்கான வினாடி வினா போட்டிகளை நடத்தி, மாணவர்களின் திறனை மேம்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இதன்படி, இன்று முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கணினி வழியில் வினாடி வினா போட்டி நடத்தப்பட வேண்டும். பள்ளிகளில் பாடங்கள் தொடர்பான ஆசிரியர்கள், இந்த வினாடி வினாவை நடத்தி, மாணவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும்.
தமிழக மாணவர்கள் எந்த விதமான போட்டி தேர்வு மற்றும் நுழைவு தேர்வையும் எதிர்கொள்ள, வினாடி வினா போன்றவற்றின் வழியே, அவர்களை தயார்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment