இடியும் மின்னலுமாய் வெளுத்து வாங்கும் கனமழை... 25 மாவட்டங்களுக்கு மழை நீடிக்கும் - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/04/2022

இடியும் மின்னலுமாய் வெளுத்து வாங்கும் கனமழை... 25 மாவட்டங்களுக்கு மழை நீடிக்கும்

 தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மேற்கு மாவட்டங்களில் இடியும் மின்னலுமாய் கனமழை கொட்டி வருகிறது. அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.நீலகிரி, தேனி, ஈரோடு, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.கேரள கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். தென் மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.கனமழைதென் தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்திருந்தது. வானிலை மையம் கூறியிருந்தது போலவே மதுரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் பிற்பகல் முதலே காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இடியும் மின்னலுமாய் 2 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.குளிர்ந்த காற்றுதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இன்று காலை கடுமையான வெயிலின் தாக்கம் இருந்தது மாலையில் லேசான குளிர்ந்த காற்று வீசியது பின்னர் திடீரென சாரல் மழை பெய்தது இந்த மழை சாரல் மழை கன மழை பெய்தது இந்த மழை இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது இதேபோல் கோவில்பட்டி அருகே கயத்தாறு, கழுகுமலை, நாலாட்டின்புத்தூர், வானரமுட்டி, மணியாச்சி சுற்று வட்டார பகுதிகளிலும் கனமழை மழை பெய்து வருகிறது.குற்றால அருவிகளில் வெள்ளம்தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இலங்கை அருகே வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று மாலை கொட்டித்தீர்த்த கனமழையால் மெயின்அருவி, ஐந்தருவி உட்பட பழைய குற்றால அருவிகளில் மிதமான அளவிற்கு தண்ணீர் வழிகிறது.சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சிகோடைகாலம் தொடங்கிய முதலே அருவிக்கரை வறண்டு காணப்பட்ட நிலையில் தற்போது அருவிகளில் தண்ணீர் கொட்டுவது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த 2 வாரமாக கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் தற்போது இதமான சூழலால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.25 மாவட்டங்களில் கனமழைஅடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, தேனி, ஈரோடு, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.:

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459