அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 24 MBBS இடங்கள் : இன்று கலந்தாய்வு - ஆசிரியர் மலர்

Latest

 




20/04/2022

அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 24 MBBS இடங்கள் : இன்று கலந்தாய்வு

சென்னை: தமிழகத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 24 மருத்துவ இடங்களை ஒன்றிய சுகாதாரத்துறை நிரப்பிக் கொள்ளும் என தகவல் தெரிவித்திருக்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் முதல் 2 கட்ட மருத்துவக் கலந்தாய்வுக்கு பின்னும் நிரப்ப முடியாத இடங்கள் அனைத்தும் வழக்கமாக மாநில ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு அகில இந்திய கலந்தாய்வுக்கு பின் 24 மருத்துவக்கல்வி இடங்கள் அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ளது. அவற்றை மாநில கல்லூரிகளுக்கு வழங்கும்படி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஏற்கெனவே ஒன்றிய சுகாதாரத்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். இந்நிலையில், காலியாக உள்ள 24 இடங்களையும் ஒன்றிய சுகாதாரத்துறையே நிரப்பிக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் காலியாக உள்ள 325 MBBS மற்றும் BDS ஆகிய இடங்களை நிரப்புவதற்கு, இன்றும் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்களுக்கு ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டநிலையில், இன்று மருத்துவக் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு அகில இந்திய ஒதுக்கீட்டின் அடிப்படையில் இன்று நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எந்தெந்த மாணவர்கள், எந்தெந்த கல்லூரிகளை தேர்வு செய்து உள்ளனர் என்ற பட்டியல் வருகின்ற 23-ம் தேதியும், பின்னர் 24 முதல் 28-ம் தேதி வரை மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று சான்றிதழ் சமர்ப்பித்து சேரலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாநில ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள 18 இடங்களை நிரப்ப ஒன்றிய சுகாதாரத்துறையிடம் அனுமதி பெற்று மருத்துவக்கல்வி இயக்குனரகம் தொடர்ந்து இறுதிக்கட்ட கலந்தாய்வை நடத்தும் என தகவல் தெரிவித்தது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459