அதிமுக ஆட்சிக் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு மீண்டும் பணி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழக அரசால் பணி அமர்த்தப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேர் கடந்த 2011ம் ஆண்டு திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர்.முன்னதாக, திமுக ஆட்சியில் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவதும், அதிமுக ஆட்சியில் டிஸ்மிஸ் ஆவதுமாக இந்த விவகாரம் தற்போது வரை உள்ளது. கொரோனா.. அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.. விழிப்புணர்வோடு இருக்க கோரிக்கைமக்கள் நல பணியாளர்கள் வழக்குமக்கள் நல பணியாளர்களுக்கு தொடர் கதையாகவே இருந்து வந்தது. 2011ல் மீண்டும் டிஸ்மிஸ் செய்யப்பட்டதும், பணியாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.எதிர்பார்ப்புஅப்போதைய அதிமுக அரசு சார்பில் அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க முடியாது என உறுதியாக கூற நிலையில் கடந்த 5ஆண்டுகளாக இவ்விவகாரம் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதே நேரத்தில் அரசு பணியை எதிர்பார்த்து மக்கள் நல பணியாளர்களின் இளமை காலம் வீணாகிவிட்டது. 25 ஆண்டுகளாக இந்த வேலையை நம்பியே அவர்கள் உள்ளனர். இதில் பட்டினியால் 126பேர் உயிரிழந்துவிட்டனர், விரக்தியால் 26 பேர் தற்கொலை செய்துகொண்டதாக மக்கள் நலப் பணியாளர்களாக இருந்தவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.முதல்வர் ஸ்டாலின்தற்போது இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு மீண்டும் பணி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் திமுக தேர்தல் வாக்குறுதிகளை கூறியுள்ளபடி மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படும் என கேள்வி எழுப்பினார்.மீண்டும் பணி வழங்கப்படும்அவரது கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் மக்கள் நலப் பணியாளர்களை நியமனம் செய்தது திமுக எனவும் அவர்களை வீட்டுக்கு அனுப்பியது அதிமுக என குற்றம் சாட்டினார். மேலும் உச்ச நீதிமன்றத்தில் மக்கள் நல பணியாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் வழக்கின் தீர்ப்புக்கு பிறகு அவர்களுக்கு உண்டு பணி வழங்கப்படும் என கூறினார். மேலும் கடந்த பத்து மாத ஆட்சி காலத்தில் திமுக அரசு செய்துள்ள சாதனைகளை எந்த ஆட்சியும் செய்யவில்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் என்ற முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்தார்.< /p
No comments:
Post a Comment