செங்கல்பட்டு அருகே அரசுப் பள்ளி சீருடையில் உள்ள மாணவிகள் சிலர் பேருந்திலேயே மது அருந்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் அத்துமீறி கோஷ்டிகளாக பிரிந்து மோதிக் கொள்ளுவது, பேருந்து மற்றும் ரயில் படிக்கட்டுகளில் ஸ்டண்ட் செய்வது என அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சென்னை மற்றும் தமிழகத்தின் சில இடங்களில் படிக்கட்டுகளில் சாகசம் செய்யும் காட்சிகள் வெளியாவது, காவல்துறையினர் அவர்களை கண்டிப்பதுமான சம்பவங்களும் தொடர்கதையாகிப் போனால், அவை குறைந்தபாடில்லை.
அத்துமீறும் மாணவிகள்
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் சக மாணவருக்கு இணையாக மாணவி ஒருவர் மின்சார ரயிலில் நடைமேடையில் இருந்து ஓடிச்சென்று ஏறி கால்களை உரசிக் கொண்டு சென்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. மாணவி மற்றும் மாணவியின் பெற்றோரை அழைத்து போலீசார் அறிவுரை மற்றும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
பெற்றோர்கள் அதிர்ச்சி
அத்துமீறும் மாணவர்களுக்கு இணையாக மாணவிகளும் அட்ராசிட்டி செய்து வருவது பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள், பொதுமக்களிடையே கடும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக செங்கல்பட்டு அருகே அரசுப் பள்ளி சீருடையில் உள்ள மாணவிகள் சிலர் பேருந்திலேயே மது அருந்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில் மது
அந்த வீடியோ காட்சிகளில் பள்ளி முடிந்து பேருந்தில் செல்லும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் பீரை குடித்துக் கொண்டும் அதனை மற்ற மாணவர்களுக்கும் பகிர்ந்து குடிப்பதோடு கூச்சலிட்டு கொண்டே அராஜகத்தில் ஈடுபட்ட வீடியோவை செல்போனில் படம்பிடித்த சிலர் அந்த வீடியோவை முகநூல் ,இஸ்ட்ராகிராம், வாட்ஸப் என அனைத்து வலை தளங்களிலும் பதிவிட்டு பரப்பியதால் பரபரப்பு நிலவியது.
போலீசார் அறிவுரை
இந்த மாணவ, மாணவிகள் செங்கல்பட்டு அருகே உள்ள பொன் விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருவது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் சமூக வலை தளங்களில் பேசுபொருள் ஆகியுள்ள நிலையில் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளும் அறிவுரைகளும் காவல்துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.,.:
No comments:
Post a Comment