டான்செட் நுழைவு தேர்வுகளுக்கு 30ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


28/03/2022

டான்செட் நுழைவு தேர்வுகளுக்கு 30ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை அறிவிப்பு.

tancet

டான்செட் நுழைவுத் தேர்வுகளுக்கு வருகிற 30ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. எம்பிஏ, எம்சிஏ, எம்டெக் உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு டான்செட் நுழைவுத்தேர்வு மூலம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதன்படி அடுத்த கல்வி ஆண்டுக்கான டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 2022-23 கல்வியாண்டுக்கான எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.பிளான், எம்.ஆர்க், படிப்புகளில் சேர டான்செட் நுழைவுத் தேர்வுக்கு வருகிற 30ம் தேதி முதல் ஏப்ரல் 18ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


டான்செட் நுழைவுத்தேர்வு எழுத விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 50% மதிப்பெண்களுடன் சம்பந்தப்பட்ட துறைகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி திட்டத்தின் மூலம் பட்டம் பெற்றவர்கள் இந்த நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது. எம்சிஏ மற்றும் எம்பிஏ படிப்புகளுக்கு மே 14ம் தேதியும், எம்இ, எம்டெக்,  எம்.பிளான், எம்.ஆர்க் படிப்புகளுக்கு மே 15ம் தேதியும் டான்செட் நுழைவுத்  தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. சென்னை,  கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல்,  ஈரோடு, காரைக்குடி, மதுரை,  நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர்,  விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட 15 இடங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறும்.

டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் தேர்வு கட்டணமாக ரூ.800 (எஸ்.சி, எஸ்.டி - ரூ.400) ஆன்லைன் மூலம் செலுத்தி வருகிற 30ம் தேதி முதல் ஏப்.18ம் தேதி வரை https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459