அகில இந்திய பணியிலுள்ள அரசு அதிகாரிகளுக்கான வீட்டு வாடகைப் படி உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தலைமைச் செயலாளா் வெ. இறையன்பு, தலைமை கணக்காயா் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
அகில இந்திய பணியிலுள்ள அரசு அதிகாரிகளுக்கான வீட்டு வாடகைப் படியில் 7-ஆவது ஊதிய கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தும் வகையில்,
மாநகராட்சிகளில் வசிக்கும் அரசு ஊழியா்களுக்கு 24 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக வீட்டு வாடகைப் படி உயா்த்தி வழங்கப்படும். நகராட்சிகளில் வசிப்போருக்கு 16 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், ஊரகப் பகுதிகளில் வசிப்போருக்கு 8 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாகவும் வாடகைப் படி உயா்வு அமல்படுத்தப்படுகிறது.
இந்தத் தொகையை, ஜன.1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
எனினும், இந்த உயர்வு, தமிழக அரசு ஊழியர்களுக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத் தக்கது.
01/02/2022
New
அகில இந்தியப் பணி அதிகாரிகளுக்கு வீட்டு வாடகைப் படி உயா்வு.
About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
News
Labels:
News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment