தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர் நிலை - I பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்து சமூகத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 603 அறிக்கை எண். 01/2022
துறை: இந்து சமய அறநிலையத்துறை
பணி: செயல் அலுவலர் நிலை - I (Executive Officer Grade - I)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500 வரை.
தகுதி: கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் சட்டம் படிப்புகளில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.07.2022 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 23.04.2022 அன்று காலை தாள்-I, மதியம் தாள்-IIக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும், 24.04.2022 அன்று தாள்-IIIக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்
http://www.tnpsc.gov.in/ or http://www.tnpscexams.in/
என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள்
http://www.tnpsc.gov.in/ or http://www.tnpscexams.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.02.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/2022_01_EO_GR_I_Notfn_Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment