பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் பணி புரியும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணை :
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக் கொள்கை - தமிழ் விளக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மதிப்பு சேர்க்கிறது தமிழ்நாடு அரசு. . . நியமனத் தேர்வுகளில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கியது தமிழ்நாடு அரசு. . .! தமிழ் வளர்ச்சித் துறை என்று தனி துறையும் அதற்குத் தனி அமைச்சரும் உள்ளது தமிழ்நாடு அரசு. . .!
ஆனால், அத்தமிழ்நாட்டு அரசின் கீழ் தமிழ் நாட்டில் உள்ள 99% தமிழ் மொழி வழிக் கல்விக் கூடங்களை நிர்வகிக்கும் பள்ளிக் கல்வித்துறை தனது துறையின் கீழான ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வுக் கொள்கையை ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டு பெரும்பான்மையான ஆசிரியர்களையும் திக்குமுக்காட வைத்துத் தமிழ் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் பள்ளிக் கல்வித்துறைக்கு முதற்கண் வாழ்த்துகள்!
பொது மாறுதல் கலந்தாய்வுக் கொள்கை குறித்து 14 பக்கங்களில் ஆங்கிலத்தில் வெளியான அரசாணையில் குறிப்பிடப்பட்டவற்றைத் தொகுத்து 3 பக்கங்களில் தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்.
இது 100% Google Translate அல்ல. எனவே, குழப்பமின்றி வாசிக்கலாம்.
அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டவை அனைத்தும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான கொள்கை மட்டுமே. இவற்றுள் எது எப்போது எப்படி பயன்படுத்தப்படும் என்பது சார்ந்த துறை இயக்குநர்களின் செயல்முறைகளைக்குப் பின்பே உறுதியாகும்.
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
No comments:
Post a Comment