டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஒருங்கிணைந்த நிலவியலாளர் சார்நிலை பணிகளுக்கான எழுத்து தேர்வு, 20, 21ம் தேதிகளில், சென்னை மாவட்ட தேர்வு மையத்தில் மட்டும் நடக்க உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட், தேர்வாணையத்தின் இணையதளமான, www.tnpsc.gov.in,
www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒருமுறை பதிவேற்றம் வழியே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யலாம். தேர்வுக்கான நிபந்தனைகள் இணையதளத்திலும், ஹால் டிக்கெட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
Title mathunga
ReplyDelete