அனைத்து விதமான அரசுத் தேர்வுகளுக்கும் தமிழ் மொழி பாடத்தை தகுதித் தேர்வாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து TNPSC தமிழ் மொழித் தாளை தகுதித் தேர்வாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இதனால், தமிழ் இலக்கியம், வரலாறு, பண்பாடு தொடர்பான பாடத்திட்டம் இந்த தேர்வுகளில் அமையலாம்.
TNPSC தேர்வுகளை பொறுத்தவரையில், பிற மாநிலத்தவர்களும் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். ஆனால், இவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகை ஏதும் வழங்கப்படாது. பிற மாநிலத்தவர் Open Category (OC) பிரிவில் மட்டுமே போட்டியிட முடியும். இனி, தகுதித் தேர்வாக தமிழ் மொழி பாடத்தை கொண்டு வரும் போது, வெளி மாநிலங்களில் இருந்து தேர்வு எழுதுவோர் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளலாம். இதனால், தமிழ் மொழி தகுதித் தேர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின்னர் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், குரூப் 4 பணிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. ஆனால் குரூப் 1, குரூப் 2 நிலையிலான பணிகளுக்கு எழுத்துத் தேர்வுடன், நேர்முகத் தேர்வும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு குரூப் 2 பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. எனவே, இவை குறித்த உறுதியான முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment