பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது சார்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


03/11/2021

பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது சார்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் உத்தரவு.

 பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது சார்ந்து அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அனுப்பிய செயல்முறைகள் : அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்க விழைகின்றேன். அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்போது கழிவறைகள் மாணவ / மாணவிகளுக்கு தனித்தனியாக அளிக்கப்பட்டு வருகின்றன . மேலும் கூடுதல் தேவைப்படின் SSA , RMSA , தொண்டு நிறுவனம் , CSR நிதி , சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிதி மூலம் கட்டப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டில் கொண்டுவரப்படுகின்றன . ஊரக பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் உள்ள கழிவறைகளை தூய்மையாக பேணுதல் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணை நிலை எண் 181 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ( மஅதி , 1 ) துறை நாள் 30.11.2015 மூலம் ஆணையிடப்பட்டது. மேலும் நகராட்சி மற்றும் மாநகராட்சியில் அமைந்துள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகள் மற்றும் அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் உள்ள கழிவறைகளை தூய்மையாக பேணுதல் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணை நிலை எண் 166 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் ( MA.IV ) துறை நாள் 23.11.2016 மூலம் ஆணையிடப்பட்டது. அதன்படி அனைத்து பள்ளிகளில் உள்ள கழிவறைகளை பராமரிப்பு சார்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் சில பள்ளிகளில் இன்று வரை தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது என தெரியவருகிறது. எனவே , இதன் சார்பாக தொடர் நடவடிக்ககையின் பொருட்டு இத்துடன் இணைத்தனுப்பும் Excel படிவத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சிகளில் அமைந்துள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் சார்பான விபரம் தனியாகவும் , அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் விவரம் தனித்தனியாக 10.11.2021 - க்குள் இவ்வாணையரகத்திற்கு Email மூலம் அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


School Cleaning Work - DSE Proceedings - Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459