அரசு பள்ளியில் மகனை சேர்த்த பெண் நீதிபதி - ஆசிரியர் மலர்

Latest

 




 


19/11/2021

அரசு பள்ளியில் மகனை சேர்த்த பெண் நீதிபதி

திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி சாந்தி. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் சக்திசர்வேஸ் (வயது 7). இவரை நேற்று திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பில் நீதிபதி சேர்த்தார். பள்ளியில் சேர்ந்த சக்திசர்வேஸுக்கு மணப்பாறை கல்வி மாவட்ட அலுவலர் செல்வி, இலவச பாடநூல் மற்றும் சீருடைகளை வழங்கினார். நீதிபதி தனது மகனை அரசு பள்ளியில் சேர்த்துள்ளது பெருமை அளிக்கிறது என்றும், இதுபோல் மற்ற அரசு உயர் அதிகாரிகளும் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும் என்றும் பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459