கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்யும் அரசாணையைத் தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி 40 கிராமுக்குக் குறைவான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், ஒரு குடும்பத்திற்கு 5 சவரன் மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.தள்ளுபடி தொடர்பான கூடுதல் நெறிமுறைகளைக் கூட்டுறவுச் சங்கப் பதிவாளர் வகுத்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகைக்கடன் அசல் மற்றும் வட்டியை அரசு ஏற்றுத் தள்ளுபடி தொகையைக் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு
தேர்தல் பரப்புரையில் கூறியபடி நகைக்கடன் தள்ளுபடி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதன் மூலம் 16 லட்சம் பேர் பயனடைவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.: ,
No comments:
Post a Comment