உதவித்தொகையுடன் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி - ஆசிரியர் மலர்

Latest

 




 


06/11/2021

உதவித்தொகையுடன் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு உதவும் வகையில் புதிய கல்வித் திட்டத்தை டெல்லி அரசு தொடங்கியுள்ளது. இந்த புதிய முயற்சியின்படி, 15000 மாணவர்களுக்கு இலவச பயிற்சி மற்றும் மாதாந்திர உதவித்தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.  
டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அரசு 'ஜெய் பீம் முக்யமந்திரி பிரதிபா விகாஸ் யோஜனா' திட்டத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது. இதன் கீழ் SC, ST, OBC மற்றும் சிறுபான்மை பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் சிவில் சர்வீசஸ், எஸ்எஸ்சி, வங்கி, ரயில்வே ஆகியவற்றுக்கான தனியார் பயிற்சியைப் பெற முடியும். , JEE, NEET மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சியை பெற முடியும். டெல்லி அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.. இதுகுறித்து பேசிய அவர் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கிய சமூகப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் பயிற்சிக்கான அணுகல் இல்லை. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், அனைத்து மாணவர்களும் தங்கள் கனவுகளை தொடர சம வாய்ப்புகளை பெறுவதற்காக இந்தத் திட்டத்தை கொண்டு வந்தோம். 46 நிறுவனங்களில் இருந்து இலவசப் பயிற்சி பெறுவதோடு மட்டுமல்லாமல், மாணவர்கள் பயணம் அல்லது படிப்புக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு உதவித்தொகையாக மாதம் ரூ.2,500 பெறுவார்கள். குறைந்தபட்சம் 15,000 மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை வழங்குவதே அரசின் நோக்கமாக உள்ளது என்று தெரிவித்தார். ஜெய் பீம் முக்யமந்திரி பிரதிபா விகாஸ் யோஜனா திட்டத்திற்கு பதிவு செய்வது எப்படி..? இந்தத் திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள்,
என்ற இணையதளத்தில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தங்களுக்கு விருப்பமான நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் அவர்கள் தகுதிக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் சேர்க்கைக்கு இடங்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த வசதி டெல்லியில் வசிக்கும் மற்றும் SC, ST, OBC மற்றும் EWS பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்அவர்கள் டெல்லியில் உள்ள பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்இந்தத் திட்டத்தில் சேருவதற்கு தேவையான முக்கிய ஆவணங்கள்ஜாதிச் சான்றிதழ்வருமானச் சான்றிதழ் அல்லது தகுதியான அதிகாரியால் வழங்கப்பட்ட EWS சான்றிதழ் ஆகியவை பொருந்தும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459