தமிழகத்தில், 140க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் முதல்கட்டமாக, அரசு கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க, கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்லூரி கல்வி இயக்குனர் பூரணசந்திரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு 2021-22 ம் ஆண்டுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்த அரசுக்கு கருத்துரு அனுப்ப வேண்டியுள்ளது. இதற்காக கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிட விபரங்களை சரிபார்த்து, படிவங்களை பூர்த்தி செய்து, கல்லூரி கல்வி இயக்ககத்துக்கு நேரில் வந்து அலுவலக பதிவுகளை சரிபார்த்து செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment