எனவே கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது 01.09.2021 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு முடிய பள்ளிகள்்
> செயல்பட்டு வருவதால் நடப்புக் ( 2021-2022 ) கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தமிழ்வழியில் பயிலும் மாணவ , மாணவியரின் தேர்ச்சி முடிவுகளை எதிர்நோக்கி , அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்குட்பட்டு அவர்களது இணை செயல்பாடுகளைக் கண்டறியும் வகையில் உரிய போட்டிகளை நடத்தி அதன் முடிவுகள் குறித்த விவரங்களை சேகரித்து தயாராக வைத்திருக்குமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே , தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களில் ஒரு மாவட்டத்திற்கு 10 ஆம் வகுப்பில் 15 மாணவர்கள் ( ரொக்கப்பரிசு தலா ரூ .10000 / - & பாராட்டு சான்றிதழ் ) மற்றும் 12 ஆம் வகுப்பில் 15 மாணவர்கள் ( ரொக்கப்பரிசு தலா ரூ .20000 / - & பாராட்டு சான்றிதழ் ) வீதம் தேர்ந்தெடுத்து சிறந்த மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கி மாணவர்களின் கல்வி மற்றும் தனித் திறன்களை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment