தீவிர கனமழை.. தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. எங்கெல்லாம் ஆரஞ்சு அலர்ட்? - ஆசிரியர் மலர்

Latest

 




 


10/11/2021

தீவிர கனமழை.. தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. எங்கெல்லாம் ஆரஞ்சு அலர்ட்?


சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாளை அதிகாலை அல்லது இன்று இரவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். இதனால் டெல்டா மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும், கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை - தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைரெட் அலர்ட்இன்றும் நாளை தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு அதி தீவிர கனமழை பெய்யும். இன்றும் நாளை இந்த 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எவ்வளவு?இந்த 8 மாவட்டங்களில் 20 செமீ முதல் 25 செமீ வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இங்கு தீவிர மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்ச் அலர்ட்இதேபோல் நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சென்னை, தென்காசி, விருதுநகர், காஞ்சீபுரம், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 21 மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும். இங்கு எல்லாம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை இன்றும் நாளையும் விடுக்கப்பட்டுள்ளது.எவ்வளவுஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் இன்றும் நாளை 12 முதல் 20 செமீ வரை மழை பெய்ய கூடும். வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வருகிறது. இந்த தாழ்வு மண்டலம் உருவாகிற காரணத்தால் கடல் கொந்தளிப்பாக காணப்படும். அதேபோல் கடலில் 60 கிமீ வேகம் வரை காற்று வீசும்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459