பி.ஆா்க் கலந்தாய்வு: 684 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு - ஆசிரியர் மலர்

Latest

 




 


02/11/2021

பி.ஆா்க் கலந்தாய்வு: 684 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு

 பி.ஆா்க் கலந்தாய்வில், இதுவரை 684 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 51 கட்டடவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கட்டட அமைப்பியல் (பி.ஆா்க்) படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் 1,700-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்ககள் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு அக்.27 இல் தொடங்கி நவ.2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த செப்.20-ஆம் தேதி தொடங்கி அக்.6-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. அதைத் தொடா்ந்து சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் கடந்த அக்.8-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற்றன. பின்னா், தகுதி பெற்றவா்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 1115 போ் தகுதி பெற்றிருந்தனா். கலந்தாய்வில் இதுவரை 2 அரசுப் பள்ளி மாணவா்கள் உள்பட 684 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459