மாணவர்களுக்கு குட் நியூஸ்.. புதுச்சேரியில் நவம்பர் 4, 5 ,6 தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


02/11/2021

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. புதுச்சேரியில் நவம்பர் 4, 5 ,6 தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

 புதுச்சேரி: வரும் நவ. 4ஆம் தேதி தீபாவளிக் கொண்டாடப்படவுள்ள நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நவ. 4 மற்றும் 5ஆம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் வரும் வரும் வியாழக்கிழமை, அதாவது நவ.4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருவதால், அதற்கு மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஊருக்குச் சென்று வருபவர்களுக்கு இது வசதியாக இருக்கும் எனக் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுத் தமிழ்நாடு அரசு, தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நவம்பர் 5ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 20ஆம் தேதி பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் புதுச்சேரி, காரைக்கால் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் நவம்பர் 5,6 ஆகிய இரு தினங்களுக்கு அரசு விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது..

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459