நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: 3 பேர் அகில இந்திய அளவில் முதலிடம்..! - ஆசிரியர் மலர்

Latest

 




 


02/11/2021

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: 3 பேர் அகில இந்திய அளவில் முதலிடம்..!

 இளநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ், பிஎச்எம்எஸ், பிஎஸ்எம்எஸ் மற்றும் இதர மருத்துவ படிப்புகளில். 86 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு, செப்டம்பர் 12ம் தேதி 202 நகரங்களில் 3,858 மையங்களில் நடந்தது. மொத்தம் 13 மொழிகளில் 2 கட்டமாக நடந்தது. தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி, தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் நாடு முழுவதும், 11 லட்சம் பேர் பங்கேற்றனர். இதனிடையே இரண்டு மாணவர்கள் தரப்பில் தனிப்பட்ட முறையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நாடு முழுவதும் சுமார் 16 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள நீட் தேர்வின் முடிவுகளை, இரண்டு மாணவர்களுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் நிறுத்தி வைக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அதனால், இந்த விவகாரத்தில் மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், நீட் தேர்வின் முடிவுகளை வெளியிடவும் தேசிய தேர்வு முகமைக்கு எந்த தடையும் கிடையாது என தெரிவித்த நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இந்நிலையில் இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுதேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தேர்வு முடிவுகள், மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள், தங்கள் மின்னஞ்சலை ஓபன் செய்து தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் குறித்த கூடுதல் தகவல்கள் நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விரைவில் வெளியிடப்பட உள்ளது. தெலங்கானாவை சேர்ந்த மிரினால் குட்டேரி, மராட்டியத்தை சேர்ந்த கார்த்திகா நாயர், டெல்லியை சேர்ந்த தன்மயி குப்தா ஆகிய மூவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459