வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதலாக 2 நாட்கள் சிறப்பு முகாம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


19/11/2021

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதலாக 2 நாட்கள் சிறப்பு முகாம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்தியத்தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, 1.1.2022-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தம் செய்வதற்கும் வசதியாக நவம்பர் 13, 14, 27, 28 ஆகிய நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 13, 14 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இருந்தபோதிலும் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் தொடர்பான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. 

எனவே, தகுதி வாய்ந்த வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்ப்பதற்கும் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் 20-ந் தேதி (நாளை), 21-ந் தேதி (நாளை மறுநாள்) ஆகிய நாட்களில் மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459