கும்பகோணம் தீ விபத்து
ஒரு தனியார் பள்ளி வாகனத்தில் ஏற்பட்ட விபத்தில் மாணவி ஒருவர் பலியானார். இதையடுத்து, பள்ளி வாகனங்களுக்கு தனியாக சிறப்பு சட்டம், 2012ல் அமல்படுத்தப்பட்டது. ஒரு தனியார் பள்ளியின் நீச்சல் குளத்தில் மாணவர் ஒருவர் மூழ்கி இறந்ததையடுத்து, பள்ளிகளின் நீச்சல் குளங்களுக்கான சட்டம், 2015ல் கொண்டு வரப்பட்டது.இந்நிலையில், 1994ம் ஆண்டு சட்டத்தின்படி, தங்கள் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் எனக்கோரி, தனியார் பள்ளிகள் தரப்பில் 2016ல், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், இந்த பிரச்னை குறித்து ஆறு வாரங்களில் முடிவு எடுக்க உத்தரவிட்டது.
இயக்குனர் கடிதம்
இந்நிலையில், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் அளித்துள்ள கடிதத்தில், 2004 ஜூலை 16ல் கும்பகோணத்தில் இயங்கிய ஸ்ரீகிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், தீ விபத்து நடந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தில், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் 94 குழந்தைகள் உயிரிழந்தன; 18 குழந்தைகள் மோசமான தீக்காயத்தால் பாதிக்கப்பட்டன. எனவே, நிரந்தர அங்கீகாரம் வழங்கும் அரசாணையை, மாணவர்களின் பாதுகாப்பு கருதி ரத்து செய்யுமாறு கோரியுள்ளார்.
அங்கீகாரம் மாற்றம்
இதைத் தொடர்ந்து இந்த அரசாணை பிறப்பிக்கப்படுகிறது.பழைய அரசாணையின்படி, ஏற்கனவே நிரந்தர அங்கீகாரம் பெற்ற பள்ளிகள், அரசு துறைகள் வழங்கும் தகுதி மற்றும் கட்டட உறுதி சான்றிதழ்களை முறையாக புதுப்பித்து, தொடர்ந்து தாக்கல் செய்யும் பட்சத்தில், அதன் நிரந்தர அங்கீகாரம் நீட்டிக்கப்படும். ஏற்கனவே நிரந்தர அங்கீகாரம் பெற்ற பள்ளிகளை தவிர, மற்ற தனியார் பள்ளிகளுக்கு இனி மூன்று ஆண்டுகளுக்கான தொடர் அங்கீகாரம் மட்டுமே வழங்கப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment