மாநிலம் முழுவதும் சமக்ர சிக்ஷாவில் பணியாற்றும் நிரலர், கட்டட பொறியாளர்கள், கணக்காளர்கள், மாத பணி நிறைவு அறிக்கை தயார் செய்வோர், தரவு உள்ளீடு செய்வோர், ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், உதவியாளர்கள் என்று அனைவருக்கும் 15% ஊதிய உயர்வு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
நவம்பர் 1-ம் தேதி முதல் கணக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலோசகர்களாக பணியாற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், நவம்பர் 1-ம் தேதிக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய உயர்வு பொருந்தாது என சமக்ர சிக்ஷா மாநில திட்ட இயக்குநர் சுதன் ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment