இன்று முதல் நவ.13ம் தேதி வரை நடைபெறவிருந்து டி.என்.பி.எஸ்.சி., தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது - ஆசிரியர் மலர்

Latest

 




 


10/11/2021

இன்று முதல் நவ.13ம் தேதி வரை நடைபெறவிருந்து டி.என்.பி.எஸ்.சி., தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது

காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகும் நிலையில் தமிழகத்தில் கனமழை பாதிப்புகளைத் தவிர்க்க, தமிழக அரசு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தால் வெளியிடப்பட்ட துறைத் தேர்வுகள் மே 2021 அறிவிக்கை எண் 8/2021 நாள் 29.04.2021 தொடர்பான இரண்டு மற்றும் மூன்றாம் நிலை மொழித்தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வுகள் (Viva Voce) 10.11.2021 முதல் 17.11.2021 வரை ஏழு நாட்கள் சென்னை, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, கோயமுத்தூர், மதுரை மற்றும் நாகர்கோவில் ஆகிய 7 மையங்களில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் நாட்களில் தமிழகத்தில் எதிர்பார்க்கப்படும் அதிகனமழை மற்றும் வானிலை நிலைய ரெட் அலர்ட் காரணமாகவும் தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் 10.11.2021 முதல் 13.11.2021 வரை ஆகிய நான்கு நாட்களில் மட்டும் நடைபெறவிருந்த 2 மற்றும் 3ஆம் நிலை மொழித் தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இந்த 4 நாட்களில் நடைபெறவிருந்த நேர்காணல் தேர்வுகளுக்கான தேதி தேர்வாணையத்தால் பின்னர் அறிவிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459