ஒரு நாள் விடுமுறை ( 10.11.2021)
1.திருச்சி ( பள்ளி மட்டும் )
2.சிவகங்கை ,
3.புதுக்கோட்டை
4.பெரம்பலூர்
5.ராமநாதபுரம் ( பள்ளி மட்டும் )
6.மதுரை
7.அரியலூர்
8. விருதுநகர்
9. திண்டுக்கல்
10.தேனி
11.திருவண்ணாமலை ( பள்ளி மட்டும் )
12.கரூர்
13.கள்ளக்குறிச்சி
14.விழுப்புரம்
15.சேலம்
16.வேலூர்
17.நாமக்கல்
18.ராணிப்பேட்டை
19. திருப்பூர் ( பள்ளி மட்டும் )
ஆகிய 19 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மட்டும் ( 10.11.2021) விடுமுறை.
இரண்டு நாள் விடுமுறை ( 10.11.2021 , 11.11.2021)
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் ( 10.11.2021 , 11.11,2021 ) விடுமுறை
கனமழை காரணமாக தமிழகத்தில் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்கள் முழுக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய
மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள், அதாவது நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்கள்திருச்சியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களை தவிர, பிற அனைத்து மாவட்டங்களுமே டெல்டா மாவட்டத்தில் அடங்கிய பகுதி என்பதை கவனிக்க முடிகிறது.விடாமல் மழை பெய்யும்கடலூர் முதல் சென்னை வரை
நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாட்களிலும் விடாமல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு நாட்களில் கனமழை இருக்கும் என்று தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.முன்னெச்சரிக்கைஇவ்வாறு மழை பெய்யும் போது வெள்ளப் பெருக்கு ஏற்படும் வாய்ப்பிருக்கிறது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எடுத்து வருகின்றன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் உயரமான பகுதிகளில் மாற்றப்படுகிறார்கள். இதன் ஒரு பகுதியாக இன்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.புதிய அறிவிப்புகள்இன்று இரவு வரை நிலவரத்தை பார்த்து மேலும் பல மாவட்டங்களிலும், மாவட்ட நிர்வாகங்கள், பள்ளிகளுக்கு, விடுமுறை அறிவிப்பை வெளியிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment