கொரோனாவிற்கு பிறகு பள்ளி மாணவர்கள் டியூஷனுக்கு செல்வது சுமார் 10% அதிகரிப்பு :வருடாந்திர கல்வி அறிக்கையில் தகவல்!! - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/11/2021

கொரோனாவிற்கு பிறகு பள்ளி மாணவர்கள் டியூஷனுக்கு செல்வது சுமார் 10% அதிகரிப்பு :வருடாந்திர கல்வி அறிக்கையில் தகவல்!!

கொரோனாவிற்கு பிறகு பள்ளி மாணவர்கள் டியூஷனுக்கு செல்வது சுமார் 10% அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனாவிற்கு முன்பு 2018ம் ஆண்டில் நாடு முழுவதும் 30%க்கும் குறைவான பள்ளி மாணவர்களே தனியாருடன் டியூஷன் சென்று படித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது சுமார் 40%மாணவர்கள் தனியார் டியூஷனுக்கு செல்வதாக வருடாந்திர கல்வி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கேரளாவை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் தனியாரிடம் டியூஷன் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. கொரோனா கால கட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று இருந்ததால், கற்கும் இடைவெளியை போக்கும் விதமாக மாணவர்களை டியூஷனுக்கு அனுப்புவது அதிகரித்துள்ளது.அருணாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் நாகாலாந்து போன்ற மாநிலங்களில் 2018 மற்றும் 2021 ஆண்டுகள் பள்ளி மாணவர்கள் டியூஷனுக்கு செல்வது அதிகரித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில், 2018 ல் டியூஷனுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 26.6% ஆக இருந்த நிலையில், 2021ல் 46.3% ஆக அதிகரித்துள்ளது.உ.பி.யில், 2018ல் 19.6% ஆக இருந்த எண்ணிக்கை 2021ல் 38.7% ஆகவும், நாகாலாந்தில் 2018ல் 27.9% ஆக இருந்த எண்ணிக்கை 2021ல் 47% ஆகவும் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459