அரசு பள்ளியில் பயின்று IIT நுழைவுத் தேர்வில் வென்ற மாணவரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் - முதலமைச்சர் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


28/10/2021

அரசு பள்ளியில் பயின்று IIT நுழைவுத் தேர்வில் வென்ற மாணவரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் - முதலமைச்சர் அறிவிப்பு

 .com/


அரசு பள்ளியில் பயின்று IIT நுழைவுத் தேர்வில் வென்ற அருண்குமார் என்ற மாணவனின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னழகன், பூவாத்தாள் தம்பதியரின் மகன் அருண்குமார், செவல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர். இவர், இந்த ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி-ஹைதராபாத்) பொறியியல் படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவர் அருண்குமாரை முதலமைச்சர் அவர்கள் இன்று நேரில் வரவழைத்து பாராட்டியுள்ளார்.

எளிய பின்புலத்திலிருந்து வந்து, அரசுப் பள்ளியில் படித்து இச்சாதனையை நிகழ்த்திய மாணவரைப் பாராட்டிய முதலமைச்சர், அவரது மேற்படிப்புக்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459